Wednesday, December 23, 2009

போதும்பொண்ணு, பக்கடா & மீனாட்சி அண்ணன்

நம் அனைவரையும் கவர்ந்த நடிகர், நடிகைகள் என்று  அனைவர்க்கும் ஒரு பட்டியல் இருக்கும். அந்த பட்டியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், அஜித்,சிம்ரன், அசின்...இப்படி நீளும். ஆனால் தமிழ் சினிமாவில் இவர்களை தவிர எத்தனையோ மிகவும் திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அந்த வகையில் சமீபத்தில் என்னை கவர்ந்த ஒரு சில நடிகர், நடிகைகளை பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....

முதலில் "பசங்க" படத்தில் மீனாட்சி(அவருதான் கதாநாயகன்) யின் அண்ணனாக வருவாரே, அவருடைய நடிப்பு உண்மையாகவே என்னை மிகவும் கவர்ந்தது. படு யதார்த்தமான நடிப்பு, லேங்குவே ஜ் டெலிவரி இப்டி எல்லாமே நம்ம வீட்ல நடக்குற மாதிரி இருந்துச்சி. அவர் மனைவிகிட்ட கோபபட்டு சண்டை போடும்போதும், அத தப்புன்னு புரிஞ்சிக்கிட்டு வருத்தப்பட்டு பேசும்போதும் ரொம்ப இயல்பா நடிச்சிருபாரு. அவருக்கு சரியான வாய்ப்புகள் இனியாவது கிடைக்க வேண்டும்.

Pasanga Gallery
அடுத்து அவர் மனைவியாக வருவாரே "போதும்பொண்ணு" அவருடைய நடிப்பும் அப்படித்தான். கீச்சு கீச்சி குரல்ல ஒரு நடுத்தர குடும்ப தலைவிக்கு உண்டான ஏக்கத்தை ரொம்ப எதார்த்தமாக வெளிபடுதிருப்பார். எந்த வித மேக் அப்பும் இல்லாமல் இயல்பான முக பாவத்தோடு நல்லாதானே நடிக்கிறார், இவருக்கும் சரியான வாய்புகள் கிடைக்க வேண்டும்.

கண்ணாடி போட்டு இருக்கே அந்த பொண்ணு நடிப்பும் நிஜமாவே அருமையா இருக்கும். அண்ணனுக்காக குட்டு வாங்கிட்டு வரும்போதும் சரி, அம்மா, அப்பா சண்டை போடும்போதும் சரி உண்மையாவே சின்ன வயசுல என்ன பாக்குற மாதிரி இருந்தது. 

"பக்கடா", இந்த பேரு கேட்டவுடனே அந்த வால் பய்யன் நியாபகம் வரும் எல்லாருக்கும். அவன் அந்த படத்துல காலேண்டர்ல ஒவ்வொரு மாதமும் விடுமுறை எத்தனை நாள் வருதுனு எண்ணி பாப்பானே அது, நாம எல்லாருமே பண்ணினதுதான். ஒரு காட்சியில ரொம்ப லீவ் இல்லன்னு "இன்னும் கொஞ்சம் விட்ருக்கலாம்" அப்டின்னு சொல்வானே, சூப்பர்.....


Pasanga Gallery

இந்த படத்தோட இயக்குனர் பாண்டிராஜ் மிக கச்சிதமாக கதாபாத்திரங்களை தேர்வு செஞ்சிருக்கார். திறமையான இந்த மாதிரி நடிகர்கள மத்த இயக்குனர்களும் பயன்படுத்திக்கணும்.


                                                        எப்புடி......

 Pasanga Gallery










தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....

உங்கள் கருத்துகளையும் தான்.........

ஓட்டுப்போட

Thursday, December 17, 2009

நாய் பொழப்பு


Once lived a dog named 'Pug' a.k.a Hutch dog.
His life was so happy when he was a kid.....




Playing.......Laughing........Sleeping......

He grew up... 
One fine day he got a job in a company.. 

In...

 

He became so famous...
He was asked to follow a small boy where ever he goes..... 


He was seen everywhere....
on websites....
 



 
 Roadside hoarding... desktop... etc..
One fine day... 
A new company takes over the old....

Pug is panicked.. in a nail biting situation!!!! 



It's been decided... 
&
 
Pug was sent off...
 


New concept adopted… here comes zoo zoo


The End
Moral:
 Never love your company, love your job, you never know when your company stops loving you.
Company needs professionals. Be professional.

Give a thought to this.............






ஓட்டுப்போட

Friday, November 13, 2009

ஏக்கம்




நா சின்ன பொண்ணா இருக்கும்போது எத பாத்தாலும் ஆசையா இருக்கும், நம்ம வீட்ல இல்லையேனு ஒரே ஏக்கமா இருக்கும். ஆனா கால போக்குல நா ஆச பட்டது எல்லாமே ஒன்னு ஒண்ணா  கிடைக்க ஆரம்பிச்சிது

டிவி பாக்குறத விட அந்த ரிமோட் மேலதான் ரொம்ப ஆசையா இருக்கும், எங்க பக்கத்துக்கு வீட்டு ல ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தாங்க, அவங்க வீட்டுக்கு போயி டிவி பாப்பேன், அந்த அக்கா ரிமோட் வச்சி டிவி ய மாத்தும் போதும் எனக்கு ஒரே ஏக்கமா இருக்கும். இப்டி நாமளும் எப்ப டிவி, ரிமோட் சகிதமா உக்காந்து நம்ம வீட்ல பாப்போம்னு. ஒரு வழிய டென்த் படிக்கிறப்ப எங்க வீட்ல டிவி வாங்கினாங்க, அத வைக்க கூட எங்க வீட்ல டேபிள் இல்ல, ஆனாலும் எனக்கு ஒரே சந்தோஷம். ரிமோட்ட பாத்தாவுடனே, எடுத்து வச்சிக்கிட்டு அந்த அக்கா மாதிரி மாத்தி மாத்தி பாக்கணும்னு ஆசை, ஆனா அது முடியல, ஏன்னா எங்க வீட்ல கேபிள் இல்லை. எப்டியோ ஒரு ஏக்கம் தீந்துடுச்சி.

அப்புறம் நா  பிளஸ் 2 படிக்கிறப்ப கேபிள் வந்தாச்சி, ரிமோட் டுக்கும் வேல வந்தாச்சி. ஆச தீர மாத்திகிட்டே இருப்பேன். மனசுல அந்த அக்கா நியாபகம் வரும்.

அடுத்து காலேஜ் சேர்ந்துட்டேன், அடுத்த ஏக்கம் மொபைல் மேல, என்னோட படிச்ச எல்லாரும் அடுத்து அடுத்து மொபைல் வச்சிக்க ஆரம்பிச்சாங்க, எனக்கு அத எப்டி ஆபரேட் பன்றதுனே தெரியாது, அதனால என் மனசுகுள்ள ஒரு தயக்கம், அத பாத்தாலே எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கும், அத பத்தி தெரிஞ்சிக்க என் தோழிகிட்ட கேக்கவும் ஈகோ தடுத்துச்சி. அதனாலேயே, எனக்கு மொபைல் புடிக்காதது போல நடிச்சிக்குவேன். எங்க போனாலும், யார பாத்தாலும் ஒரே மொபைல் ஆ இருந்துச்சி, எனக்கே ஒரு வெறி வந்துட்டு, அப்பதான் எங்க அண்ணன் வேற மொபைல் வாங்கினதால பழச என்கிட்ட தந்துட்டு, எப்டியோ நோண்டி அத கத்துகிட்டேன், அப்புறம் என்ன... எங்க போனாலும் மொபைல் இல்லாம போறதில்ல..
பி.சி.ஏ   முடிச்சி திரும்ப எல்லாரையும் பாத்தா எல்லாரும், கலர் மொபைல் வச்சிருகாங்க, என்னடா இது வம்பா போச்சி, நாம சும்மா இருந்தாலும் நம்ம கூட இருக்கவங்க நம்மள சும்மா இருக்க விட மாட்டாங்க போலனு நனச்சிகிடேன், இருந்தாலும் கலர் போன் மேல ஒரு ஏக்கம் இருந்துட்டேதான் இருந்துச்சி, ஓகே பாப்போம், டிவி லேந்து மொபைல் வரைக்கும்  கிடச்சிருக்கு இதும் கிடைக்கும் னு ஒரு நம்பிக்கையில இருந்துட்டேன். அட, நம்ப மாட்டீங்க அதும் உடனே கிடைச்சிது . எப்டி தெரியுமா?  எம்.எஸ்.சி  முடிச்சவுடனே  எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க, புது மாப்ள எனக்கு முதல்ல கொடுத்த பரிசு எது தெரியுமா? கலர் மொபைல் தான்.அத வச்சிக்கிட்டுதான் நாங்க ரெண்டு பேரும் மணி கணக்கா பேசினோம்.

எங்களுக்கு நிச்சயம் பண்ணி நடுவுல நாலு மாசம் இடைவேளை இருந்துச்சி, அப்ப நா என்னோட படிச்ச ஒரு சில தோழிங்களோட கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்தது, என்னோட பழைய தோழிங்க எல்லாரையும் பாத்து பேசிட்டு இருந்தேன், அப்பதான் கவனிச்சேன், எல்லார் கையிலயும் கேமரா மொபைல்.  ஒரு சில தோழிங்க அவங்க வருங்கால கணவனோட போட்டோசதான் ஸ்க்ரீன் சேவரா வச்சிருந்தாங்க. அடுத்த ஏக்கம் மனசுல ஒட்டிகிச்சி. அந்த ஆசையா வேற யார்ட சொல்ல முடியும், அவருகிட்டதான். எங்களுக்கு கல்யாணமும் ஆயிடுச்சி, உடனே வாங்கி தர முடியல, இப்பதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்காக கேமரா மொபைல் வாங்கி தந்தாங்க. அதுலதான் இப்ப என் பைய்யனோட ஒவ்வொரு அசைவையும் சுட்டு தள்ளிட்டு இருக்கேன்.

இப்டி நா ஆச பட்டது எல்லாமே சீக்கிரமாவே எனக்கு   கிடச்சிடுச்சி, ஆனா ஒரு பெரிய ஆசை சின்ன வயசுலேர்ந்தே இருந்துச்சி, அது நிறைவேறவே சான்ஸ் இல்லேன்னு இருந்தேன், அது என்ன ஆசை தெரியுமா? ஆகாய விமானத்துல  ல பறக்கணும்னு ஆசை. சின்ன வயசுல விமான  சத்தம் கேட்டா வெளில ஓடி வந்து நானும், எங்க அம்மாவும் போட்டி போட்டுக்கிட்டு பாப்போம். அதுவும் ஒரு வழியா என் கணவரோட புண்ணியத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னால நிறைவேரிடுச்சி. 


நா வருஷ கணக்கா காத்திருந்து இந்த எல்லாத்தையும் அனுபவிச்சேன். ஆனா என் பைய்யன் இன்னிக்கு விளையாடறது  டிவி ரிமோட், மொபைல், லேப் டாப்   இது எல்லாத்தையும் வச்சிக்கிட்டுதான். அவன் இனி எந்த விஷயத்துக்கு எங்க போறன்னு தெரியல.....ஒரே வேல அவன் பாட்டி, தாதா ,பம்பரம், கில்லி இதுக்கெல்லாம் எங்குவானோ? ஆனா அவனோட ஏக்கத்தை எல்லாம் நிறைவேத்தி வைக்க என்னால முடியுமான்னு தெரியல??? 



தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....

உங்கள் கருத்துகளையும் தான்.........






ஓட்டுப்போட

Wednesday, November 4, 2009

பண்டிகை களும் நடிகைகளின் பேட்டியும் ....

எத்தனை பண்டிகைகள் கொண்டாடினாலும், அந்த கொண்டாட்டத்தில் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளுக்கும், நம் பண்டிகைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றால் அது துளி கூட இருக்காது. விநாயகர் சதுர்த்தி அன்று நமீதாவுடன் சந்திப்பு, விநாயகருக்கும், நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்? சரஸ்வதி பூஜை அன்று சினேகா பேட்டி, இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது, நம் சுதந்திர தினத்தன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்சிகள்தான். போட்டி போட்டு கொண்டு அண்மையில் வெளியாகி தோல்வி கண்ட திரைப்படங்களின் நாயகிகளை எல்லா தொலைக்காட்சிகளிலும் மொய்த்துவிடுவார்கள். எல்லா நாயகிகளிடமும் ஒரே மாதிரி கேள்விகள்தான், அவர்கள் பதில்களும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். என்ன ஒரு சில தமிழ் நடிகைகள், தமிழ் தெரியாதது போல பேசுவார்கள். அப்படி ஒரு கற்பனயான பேட்டியை பார்ப்போமா.....



நிகழ்ச்சி தொகுப்பளர்: (நேயர்களை பார்த்து)வணக்கம் நேயர்களே, இன்னிக்கு சுதந்திர தினம், இந்த நல்ல நாள்ல உங்க எல்லாறையும் சந்திக்க ஒரு இளம் கதாநாயகி வந்துருககங்க.vanakkam madam..



நடிகை : வணக்கம், எல்லா viewers kum happy independence day....



நி.தொ : ok madam, இந்த சினிமா துறைக்கு எப்டி வந்தீங்க?உங்க சின்ன வயசு கனவா?


நடிகை : no no, actually it was an accident. school ல படிச்சிட்டு இருக்கும்போது, ஒரு function ல, director என்ன பாத்துருக்காரு, அவரு story க்கு நா suit ஆனாதல, எங்க mummy, daddy கிட்ட பேசிருக்காரு, first எங்க mummy கொஞ்சம் hesitate ஆனங்க, but நல்ல character, so ஒத்துகிட்டாங்க..


நி.தொ : உங்க முடிவு என்னவா இருந்துது, உடனே ok சொல்லிடிங்களா?


நடிகை : yes, because ரொம்ப சின்ன வயசு(எப்பவுமேதான்!!!), correct decision எடுக்குற வயசு இல்ல so, mummy சொன்னவுடனே நானும் ok சொல்லிட்டேன்.


நி.தொ. : அப்ப school life miss பண்றோம், படிப்பு பாதியிலயே நின்னுடும்னு நீங்க feel பண்ணாலயா?


நடிகை : no, because i am decided to do my studies side by side. so,எந்த feeling கும் இல்ல.



நி.தொ : படிப்புல நீங்க எப்டி?


நடிகை : yah, i am a very good student in studies. above 90% தான் எப்பவுமே என்னோட மார்க்.(எல்லா நடிகைகளுமே அப்டித்தான்)


நி.தொ. : உங்க முதல் நடிப்பு அனுபவத்த பத்தி சொல்லுங்க


நடிகை : first day shooting, first time camera முன்னால நிக்கிரேன், கொஞ்சம் பயம் இருந்தது, but director, hero, co-artists எல்லாரும் ரொம்ப help பான்னாங்க,friendly ஆ பழகினாங்க.


நி.தொ. : நீங்க தற்செயலாதான் நடிக்க வந்ததா சொன்னீங்க. ஒருவேள நடிக்க வரலேன்ன என்ன ஆகிருப்பீங்க?
நடிகை : my ambition is to become a business woman, so U.S.ல M.B.A.
படிச்சிட்டு இருந்துருப்பேன் .

நி.தொ. : கவர்ச்சியா நடிக்கிரத பத்தி என்ன நினைகிறீங்க?
நடிகை : அதுல என்ன தப்பு இருக்கு. எனக்கு glamour dress suit ஆகும். என்னோட ரசிகர்களும் அதான் எதிர்பாக்குறாங்க(அப்டின்னு அவுங்களாவே முடிவு பண்ணிகிறது)

நி.தொ. : அப்போ நீச்சல் உடையில நடிக்க தயாரா?
நடிகை : கதைக்கு தேவைபட்டா கண்டிப்பா நடிப்பேன். swimming pool ல swim dress la போட முடியும், புடவைய எப்டி கட்டிக்க முடியும்? (எப்டி வேணா நடிக்க தயார் னு சொல்லாம சொல்றது)

நி.தொ. : உங்களுக்கு புடிச்ச நடிகர், நடிகை யாரு?
நடிகை : எல்லாரையும் புடிக்கும்.

நி.தொ. : யாராவது ஒருத்தர மட்டும் சொல்லுங்க.
நடிகை : (யோசிக்கிறார்) மனோரமா .

நி.தொ. : உங்களுக்கு புடிச்ச படம்

நடிகை : பாச மலர் ,வீரபாண்டிய கட்டபொம்மன்

( ஆனா அவிங்க இந்த பழைய தமிழ் படத்தையெல்லாம் பாத்துருக்க் மாட்டாங்க )


.தொ. : இப்ப நாம் நிறைவு பகுதிக்கு வந்துடோம், உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
நடிகை : எல்லாரும் என்னோட படத்த பாருங்க, தொடர்ந்து உங்க ஆதரவ எனக்கு தாங்க...வணக்கம்.

சுதந்திர தினத்துக்கு அவங்க படத்த பாத்து சுதந்திரத்த கொண்டாட சொல்றாங்க, நாமளும் அப்டிதானே இருக்கோம். எப்பவாவது யோசிச்சிருக்கோமா
..

உங்களுக்கு பிடித்ருந்தால் உங்கள் ஓட்டுகளை தமிலிஷ், தமிழ் ம
த்தில் பதிவு செய்யவும்















ஓட்டுப்போட

Friday, October 23, 2009

எனது முதல் பதிவு ---ஆணாதிக்கம் -சிறுகதை

சீதாவிற்கு அன்று நடந்த சம்பவத்தை நினைத்து பதற்றம், சோகம் எதுவுமே இல்லை. ஏதோ ஒன்றை சாதித்த மகிழ்ச்சி , கர்வம்தான் இருந்தது. அப்படி என்ன நடந்தது தெரியுமா?
அவள் அப்பாவுடன் சண்டை, தன்னை இருபத்தி இரண்டு வருடங்களாக வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்த அப்பாவை எதிர்த்து பேசிவிட்டாள். பதிலுக்கு பதில் கோபம், கொப்பளித்தது அவளிடம். நீங்கள் நினைக்கலாம் இது சாதரண நிகழ்வுதானே என்று, ஆனால் அப்படியல்ல. அன்று என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு சீதாவின் தந்தையை பற்றி தெரிந்து கொள்வோம்....
அவர் ஒரு குடிகாரரோ அல்ல ,புகை பிடிப்பவரும் அல்ல ,வெற்றிலைபாக்கு கூட போடாத சொக்க தங்கம்.ஒரு ஆணிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்குமோ , அவற்றின் காற்று கூட படாமல் இருப்பவர். ஆனால் மனதில் "ஆணாதிக்கம்" என்னும் கொடிய எண்ணமுடையவர். "தான்" என்ற அகந்தை அவருக்கு மிக அதிகமாவே உண்டு.

சீதாவின் அம்மாவை திருமணம் செய்த பின்னர், எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவர், அதற்கு முன்பும்தான்.... ஆனால் தன் மனைவி தன் பேச்சை கேட்க வேண்டும், அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் எண்ணினார். அது இயல்புதான், ஆனால், தான் மட்டும், அவள் பேச்சை காது கொடுத்தும் கேட்க கூடாது என்று கொள்கை வைத்திருந்தார். ஏனென்றால் அவள் பெண். மனைவி என்பவள் கணவனிடம் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்பது அவரின் வரையறை.
இவ்வாறே அவர் போட்ட கட்டைளைகளுக்கு கீழ் படிந்தே நடந்தார் நளாயினி (சீதாவின் அம்மா). கடந்த இருபத்தைந்து வருடங்களகாவே நளாயினி ஒரு சிறை கைதிதான். தனக்கு விருப்பமான புடவையை வாங்க கூட கடைக்கு அனுப்ப மாட்டார். அவரே இரண்டு, மூன்று புடவைகளை எடுத்து வந்து, அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாலை ஆறு மணிக்குள் எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும், குங்குமம்தான் வைத்து கொள்ள வேண்டும், கழுத்து, கை முழுவதுமாக மூடுமாறு ரவிக்கை போட வேண்டும், கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏற கூடாது(காரணம் ஆண்கள் இடிப்பார்களாம்) இப்படி ஏகப்பட்ட கட்டுபாடுகள். இவை அனைத்தையும் பொறுத்து கொண்டுதான் வாழ்ந்தார் நளாயினி.
ஆனால் சீதாவால் முடியவில்லை, அவள் இந்த கால பெண் அல்லவா. அவளுக்கு விவரம் தெரிந்து அவள் அப்பா, சிறிது பேசியதே இல்லை. கோவில், திருவிழா, சினிமா என்று எங்கும் கூட்டி சென்றது இல்லை. அவள் என்ன விரும்புகிறாளோ அதை உடனே வாங்கி தந்துவிடுவார். அவள் விரும்பியதை வாங்கி தந்து அவளை மகிழ்ச்சி படுத்த தவறியதே இல்லை. ஆனால் சீதா எதிர்பார்த்தது அது மட்டுமல்ல......எல்லோரையும் போல குடும்பத்தோடு எங்கும் செல்ல வேண்டும், தந்தையுடன் அமர்ந்து நிறைய பேச வேண்டும், அவள் அம்மாவும், அப்பாவும் ஒன்றாக சேர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும், சிரித்து பேசி மகிழ வேண்டும். இப்படி பல....`ஆனால் இன்று வரை எதுவுமே நிறைவேற வில்லை, இனி நிறைவேற போவதும் இல்லை...
சீதாவும் வளர்ந்து பெரியவளாகிவிட்டாள், அவளுக்கான கட்டளைகளும் தயாராகிவிட்டன, இருபாலர் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்க மாட்டேன் .சினிமா பார்க்க கூடாது ,தோழிகளோடு எங்கும் போக கூடாது .அவர் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் செய்திகள் மட்டுமே பார்க்க வேண்டும்.காரணம் இந்த சினிமா கெடுத்து விடுமாம் .

இப்படியாக சீதாவும் வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்தாள்,திருமணமும் நடந்து முடிந்தது.ஆனால் சீதாவிற்கு அவள் அப்பா மீது இருந்த கோபம் மனதில் எங்கோ புதைந்து இருந்தது , அவளை மிகவும் கோப படுத்தியது ,அவள் அம்மாவை அவர் நடத்திய விதம்,ஒரு அடிமையை போலத்தான் நடத்தினார்.மனைவி என்பவள் சமைப்பது,துணி துவைப்பது,கணவனின் உடைகளுக்கு இஸ்த்ரி போடுவது,கணவருக்கு பணிவிடை செய்வது இதுதான் அவள் வேலை,அவளுக்கென்று உணர்ச்சியே கிடையாதா? பெண் என்பதால் இருக்க கூடாதா? இந்த கேள்வியை தான் சீதா அன்று நடந்த பேச்சு வார்த்தையில் ,அவள் அப்பாவை பார்த்து கேட்டாள் .அது தப்பாம் அந்த மனிதருக்கு ,"இன்றில் இருந்து நீ எனக்கு மகளே இல்லை 'என்று ஒரே வரியில் முடித்து கொண்டார் ,அன்று வீட்டை விடு போனவர் தான் ,ஆனால் சீதாவிற்கு தன்னால் தான் தன் அப்பாவிற்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்வு இல்லை ,தன் அம்மாவை சிறையில் இருந்து மீட்ட நிம்மதியே ஓங்கியிருந்தது .கடைசி காலத்தில் கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து தங்கள் பழைய நினைவுகளை அசை போட்டு ,பேரன் பேத்திகளை கொஞ்சி சந்தோசமாய் வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் ,ஆனால் இன்றும் அவள் அப்பாவிற்கு தன் மேல் தவறு இல்லை என்றுதான் சொல்லி திரிகிறார் ,"நான் இப்படித்தான் ,தன்மானக்காரன் பொம்பளைங்களுக்கு என்ன அவ்ளோ திமிரு ,என் கால் ல விழுந்து மனிப்பு கேட்டா கூட நான் வீட்டுக்கு வர மாட்டேன் ",இது தான் அவர் முடிவு.



உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும் ....

உங்கள் ஓட்டுக்களை tamilish இல் போடவும் ..





ஓட்டுப்போட