Friday, November 13, 2009

ஏக்கம்




நா சின்ன பொண்ணா இருக்கும்போது எத பாத்தாலும் ஆசையா இருக்கும், நம்ம வீட்ல இல்லையேனு ஒரே ஏக்கமா இருக்கும். ஆனா கால போக்குல நா ஆச பட்டது எல்லாமே ஒன்னு ஒண்ணா  கிடைக்க ஆரம்பிச்சிது

டிவி பாக்குறத விட அந்த ரிமோட் மேலதான் ரொம்ப ஆசையா இருக்கும், எங்க பக்கத்துக்கு வீட்டு ல ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தாங்க, அவங்க வீட்டுக்கு போயி டிவி பாப்பேன், அந்த அக்கா ரிமோட் வச்சி டிவி ய மாத்தும் போதும் எனக்கு ஒரே ஏக்கமா இருக்கும். இப்டி நாமளும் எப்ப டிவி, ரிமோட் சகிதமா உக்காந்து நம்ம வீட்ல பாப்போம்னு. ஒரு வழிய டென்த் படிக்கிறப்ப எங்க வீட்ல டிவி வாங்கினாங்க, அத வைக்க கூட எங்க வீட்ல டேபிள் இல்ல, ஆனாலும் எனக்கு ஒரே சந்தோஷம். ரிமோட்ட பாத்தாவுடனே, எடுத்து வச்சிக்கிட்டு அந்த அக்கா மாதிரி மாத்தி மாத்தி பாக்கணும்னு ஆசை, ஆனா அது முடியல, ஏன்னா எங்க வீட்ல கேபிள் இல்லை. எப்டியோ ஒரு ஏக்கம் தீந்துடுச்சி.

அப்புறம் நா  பிளஸ் 2 படிக்கிறப்ப கேபிள் வந்தாச்சி, ரிமோட் டுக்கும் வேல வந்தாச்சி. ஆச தீர மாத்திகிட்டே இருப்பேன். மனசுல அந்த அக்கா நியாபகம் வரும்.

அடுத்து காலேஜ் சேர்ந்துட்டேன், அடுத்த ஏக்கம் மொபைல் மேல, என்னோட படிச்ச எல்லாரும் அடுத்து அடுத்து மொபைல் வச்சிக்க ஆரம்பிச்சாங்க, எனக்கு அத எப்டி ஆபரேட் பன்றதுனே தெரியாது, அதனால என் மனசுகுள்ள ஒரு தயக்கம், அத பாத்தாலே எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கும், அத பத்தி தெரிஞ்சிக்க என் தோழிகிட்ட கேக்கவும் ஈகோ தடுத்துச்சி. அதனாலேயே, எனக்கு மொபைல் புடிக்காதது போல நடிச்சிக்குவேன். எங்க போனாலும், யார பாத்தாலும் ஒரே மொபைல் ஆ இருந்துச்சி, எனக்கே ஒரு வெறி வந்துட்டு, அப்பதான் எங்க அண்ணன் வேற மொபைல் வாங்கினதால பழச என்கிட்ட தந்துட்டு, எப்டியோ நோண்டி அத கத்துகிட்டேன், அப்புறம் என்ன... எங்க போனாலும் மொபைல் இல்லாம போறதில்ல..
பி.சி.ஏ   முடிச்சி திரும்ப எல்லாரையும் பாத்தா எல்லாரும், கலர் மொபைல் வச்சிருகாங்க, என்னடா இது வம்பா போச்சி, நாம சும்மா இருந்தாலும் நம்ம கூட இருக்கவங்க நம்மள சும்மா இருக்க விட மாட்டாங்க போலனு நனச்சிகிடேன், இருந்தாலும் கலர் போன் மேல ஒரு ஏக்கம் இருந்துட்டேதான் இருந்துச்சி, ஓகே பாப்போம், டிவி லேந்து மொபைல் வரைக்கும்  கிடச்சிருக்கு இதும் கிடைக்கும் னு ஒரு நம்பிக்கையில இருந்துட்டேன். அட, நம்ப மாட்டீங்க அதும் உடனே கிடைச்சிது . எப்டி தெரியுமா?  எம்.எஸ்.சி  முடிச்சவுடனே  எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க, புது மாப்ள எனக்கு முதல்ல கொடுத்த பரிசு எது தெரியுமா? கலர் மொபைல் தான்.அத வச்சிக்கிட்டுதான் நாங்க ரெண்டு பேரும் மணி கணக்கா பேசினோம்.

எங்களுக்கு நிச்சயம் பண்ணி நடுவுல நாலு மாசம் இடைவேளை இருந்துச்சி, அப்ப நா என்னோட படிச்ச ஒரு சில தோழிங்களோட கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்தது, என்னோட பழைய தோழிங்க எல்லாரையும் பாத்து பேசிட்டு இருந்தேன், அப்பதான் கவனிச்சேன், எல்லார் கையிலயும் கேமரா மொபைல்.  ஒரு சில தோழிங்க அவங்க வருங்கால கணவனோட போட்டோசதான் ஸ்க்ரீன் சேவரா வச்சிருந்தாங்க. அடுத்த ஏக்கம் மனசுல ஒட்டிகிச்சி. அந்த ஆசையா வேற யார்ட சொல்ல முடியும், அவருகிட்டதான். எங்களுக்கு கல்யாணமும் ஆயிடுச்சி, உடனே வாங்கி தர முடியல, இப்பதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்காக கேமரா மொபைல் வாங்கி தந்தாங்க. அதுலதான் இப்ப என் பைய்யனோட ஒவ்வொரு அசைவையும் சுட்டு தள்ளிட்டு இருக்கேன்.

இப்டி நா ஆச பட்டது எல்லாமே சீக்கிரமாவே எனக்கு   கிடச்சிடுச்சி, ஆனா ஒரு பெரிய ஆசை சின்ன வயசுலேர்ந்தே இருந்துச்சி, அது நிறைவேறவே சான்ஸ் இல்லேன்னு இருந்தேன், அது என்ன ஆசை தெரியுமா? ஆகாய விமானத்துல  ல பறக்கணும்னு ஆசை. சின்ன வயசுல விமான  சத்தம் கேட்டா வெளில ஓடி வந்து நானும், எங்க அம்மாவும் போட்டி போட்டுக்கிட்டு பாப்போம். அதுவும் ஒரு வழியா என் கணவரோட புண்ணியத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னால நிறைவேரிடுச்சி. 


நா வருஷ கணக்கா காத்திருந்து இந்த எல்லாத்தையும் அனுபவிச்சேன். ஆனா என் பைய்யன் இன்னிக்கு விளையாடறது  டிவி ரிமோட், மொபைல், லேப் டாப்   இது எல்லாத்தையும் வச்சிக்கிட்டுதான். அவன் இனி எந்த விஷயத்துக்கு எங்க போறன்னு தெரியல.....ஒரே வேல அவன் பாட்டி, தாதா ,பம்பரம், கில்லி இதுக்கெல்லாம் எங்குவானோ? ஆனா அவனோட ஏக்கத்தை எல்லாம் நிறைவேத்தி வைக்க என்னால முடியுமான்னு தெரியல??? 



தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....

உங்கள் கருத்துகளையும் தான்.........






ஓட்டுப்போட