Friday, November 13, 2009

ஏக்கம்
நா சின்ன பொண்ணா இருக்கும்போது எத பாத்தாலும் ஆசையா இருக்கும், நம்ம வீட்ல இல்லையேனு ஒரே ஏக்கமா இருக்கும். ஆனா கால போக்குல நா ஆச பட்டது எல்லாமே ஒன்னு ஒண்ணா  கிடைக்க ஆரம்பிச்சிது

டிவி பாக்குறத விட அந்த ரிமோட் மேலதான் ரொம்ப ஆசையா இருக்கும், எங்க பக்கத்துக்கு வீட்டு ல ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தாங்க, அவங்க வீட்டுக்கு போயி டிவி பாப்பேன், அந்த அக்கா ரிமோட் வச்சி டிவி ய மாத்தும் போதும் எனக்கு ஒரே ஏக்கமா இருக்கும். இப்டி நாமளும் எப்ப டிவி, ரிமோட் சகிதமா உக்காந்து நம்ம வீட்ல பாப்போம்னு. ஒரு வழிய டென்த் படிக்கிறப்ப எங்க வீட்ல டிவி வாங்கினாங்க, அத வைக்க கூட எங்க வீட்ல டேபிள் இல்ல, ஆனாலும் எனக்கு ஒரே சந்தோஷம். ரிமோட்ட பாத்தாவுடனே, எடுத்து வச்சிக்கிட்டு அந்த அக்கா மாதிரி மாத்தி மாத்தி பாக்கணும்னு ஆசை, ஆனா அது முடியல, ஏன்னா எங்க வீட்ல கேபிள் இல்லை. எப்டியோ ஒரு ஏக்கம் தீந்துடுச்சி.

அப்புறம் நா  பிளஸ் 2 படிக்கிறப்ப கேபிள் வந்தாச்சி, ரிமோட் டுக்கும் வேல வந்தாச்சி. ஆச தீர மாத்திகிட்டே இருப்பேன். மனசுல அந்த அக்கா நியாபகம் வரும்.

அடுத்து காலேஜ் சேர்ந்துட்டேன், அடுத்த ஏக்கம் மொபைல் மேல, என்னோட படிச்ச எல்லாரும் அடுத்து அடுத்து மொபைல் வச்சிக்க ஆரம்பிச்சாங்க, எனக்கு அத எப்டி ஆபரேட் பன்றதுனே தெரியாது, அதனால என் மனசுகுள்ள ஒரு தயக்கம், அத பாத்தாலே எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கும், அத பத்தி தெரிஞ்சிக்க என் தோழிகிட்ட கேக்கவும் ஈகோ தடுத்துச்சி. அதனாலேயே, எனக்கு மொபைல் புடிக்காதது போல நடிச்சிக்குவேன். எங்க போனாலும், யார பாத்தாலும் ஒரே மொபைல் ஆ இருந்துச்சி, எனக்கே ஒரு வெறி வந்துட்டு, அப்பதான் எங்க அண்ணன் வேற மொபைல் வாங்கினதால பழச என்கிட்ட தந்துட்டு, எப்டியோ நோண்டி அத கத்துகிட்டேன், அப்புறம் என்ன... எங்க போனாலும் மொபைல் இல்லாம போறதில்ல..
பி.சி.ஏ   முடிச்சி திரும்ப எல்லாரையும் பாத்தா எல்லாரும், கலர் மொபைல் வச்சிருகாங்க, என்னடா இது வம்பா போச்சி, நாம சும்மா இருந்தாலும் நம்ம கூட இருக்கவங்க நம்மள சும்மா இருக்க விட மாட்டாங்க போலனு நனச்சிகிடேன், இருந்தாலும் கலர் போன் மேல ஒரு ஏக்கம் இருந்துட்டேதான் இருந்துச்சி, ஓகே பாப்போம், டிவி லேந்து மொபைல் வரைக்கும்  கிடச்சிருக்கு இதும் கிடைக்கும் னு ஒரு நம்பிக்கையில இருந்துட்டேன். அட, நம்ப மாட்டீங்க அதும் உடனே கிடைச்சிது . எப்டி தெரியுமா?  எம்.எஸ்.சி  முடிச்சவுடனே  எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க, புது மாப்ள எனக்கு முதல்ல கொடுத்த பரிசு எது தெரியுமா? கலர் மொபைல் தான்.அத வச்சிக்கிட்டுதான் நாங்க ரெண்டு பேரும் மணி கணக்கா பேசினோம்.

எங்களுக்கு நிச்சயம் பண்ணி நடுவுல நாலு மாசம் இடைவேளை இருந்துச்சி, அப்ப நா என்னோட படிச்ச ஒரு சில தோழிங்களோட கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்தது, என்னோட பழைய தோழிங்க எல்லாரையும் பாத்து பேசிட்டு இருந்தேன், அப்பதான் கவனிச்சேன், எல்லார் கையிலயும் கேமரா மொபைல்.  ஒரு சில தோழிங்க அவங்க வருங்கால கணவனோட போட்டோசதான் ஸ்க்ரீன் சேவரா வச்சிருந்தாங்க. அடுத்த ஏக்கம் மனசுல ஒட்டிகிச்சி. அந்த ஆசையா வேற யார்ட சொல்ல முடியும், அவருகிட்டதான். எங்களுக்கு கல்யாணமும் ஆயிடுச்சி, உடனே வாங்கி தர முடியல, இப்பதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்காக கேமரா மொபைல் வாங்கி தந்தாங்க. அதுலதான் இப்ப என் பைய்யனோட ஒவ்வொரு அசைவையும் சுட்டு தள்ளிட்டு இருக்கேன்.

இப்டி நா ஆச பட்டது எல்லாமே சீக்கிரமாவே எனக்கு   கிடச்சிடுச்சி, ஆனா ஒரு பெரிய ஆசை சின்ன வயசுலேர்ந்தே இருந்துச்சி, அது நிறைவேறவே சான்ஸ் இல்லேன்னு இருந்தேன், அது என்ன ஆசை தெரியுமா? ஆகாய விமானத்துல  ல பறக்கணும்னு ஆசை. சின்ன வயசுல விமான  சத்தம் கேட்டா வெளில ஓடி வந்து நானும், எங்க அம்மாவும் போட்டி போட்டுக்கிட்டு பாப்போம். அதுவும் ஒரு வழியா என் கணவரோட புண்ணியத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னால நிறைவேரிடுச்சி. 


நா வருஷ கணக்கா காத்திருந்து இந்த எல்லாத்தையும் அனுபவிச்சேன். ஆனா என் பைய்யன் இன்னிக்கு விளையாடறது  டிவி ரிமோட், மொபைல், லேப் டாப்   இது எல்லாத்தையும் வச்சிக்கிட்டுதான். அவன் இனி எந்த விஷயத்துக்கு எங்க போறன்னு தெரியல.....ஒரே வேல அவன் பாட்டி, தாதா ,பம்பரம், கில்லி இதுக்கெல்லாம் எங்குவானோ? ஆனா அவனோட ஏக்கத்தை எல்லாம் நிறைவேத்தி வைக்க என்னால முடியுமான்னு தெரியல??? தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....

உங்கள் கருத்துகளையும் தான்.........


ஓட்டுப்போட

Wednesday, November 4, 2009

பண்டிகை களும் நடிகைகளின் பேட்டியும் ....

எத்தனை பண்டிகைகள் கொண்டாடினாலும், அந்த கொண்டாட்டத்தில் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளுக்கும், நம் பண்டிகைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றால் அது துளி கூட இருக்காது. விநாயகர் சதுர்த்தி அன்று நமீதாவுடன் சந்திப்பு, விநாயகருக்கும், நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்? சரஸ்வதி பூஜை அன்று சினேகா பேட்டி, இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது, நம் சுதந்திர தினத்தன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்சிகள்தான். போட்டி போட்டு கொண்டு அண்மையில் வெளியாகி தோல்வி கண்ட திரைப்படங்களின் நாயகிகளை எல்லா தொலைக்காட்சிகளிலும் மொய்த்துவிடுவார்கள். எல்லா நாயகிகளிடமும் ஒரே மாதிரி கேள்விகள்தான், அவர்கள் பதில்களும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். என்ன ஒரு சில தமிழ் நடிகைகள், தமிழ் தெரியாதது போல பேசுவார்கள். அப்படி ஒரு கற்பனயான பேட்டியை பார்ப்போமா.....நிகழ்ச்சி தொகுப்பளர்: (நேயர்களை பார்த்து)வணக்கம் நேயர்களே, இன்னிக்கு சுதந்திர தினம், இந்த நல்ல நாள்ல உங்க எல்லாறையும் சந்திக்க ஒரு இளம் கதாநாயகி வந்துருககங்க.vanakkam madam..நடிகை : வணக்கம், எல்லா viewers kum happy independence day....நி.தொ : ok madam, இந்த சினிமா துறைக்கு எப்டி வந்தீங்க?உங்க சின்ன வயசு கனவா?


நடிகை : no no, actually it was an accident. school ல படிச்சிட்டு இருக்கும்போது, ஒரு function ல, director என்ன பாத்துருக்காரு, அவரு story க்கு நா suit ஆனாதல, எங்க mummy, daddy கிட்ட பேசிருக்காரு, first எங்க mummy கொஞ்சம் hesitate ஆனங்க, but நல்ல character, so ஒத்துகிட்டாங்க..


நி.தொ : உங்க முடிவு என்னவா இருந்துது, உடனே ok சொல்லிடிங்களா?


நடிகை : yes, because ரொம்ப சின்ன வயசு(எப்பவுமேதான்!!!), correct decision எடுக்குற வயசு இல்ல so, mummy சொன்னவுடனே நானும் ok சொல்லிட்டேன்.


நி.தொ. : அப்ப school life miss பண்றோம், படிப்பு பாதியிலயே நின்னுடும்னு நீங்க feel பண்ணாலயா?


நடிகை : no, because i am decided to do my studies side by side. so,எந்த feeling கும் இல்ல.நி.தொ : படிப்புல நீங்க எப்டி?


நடிகை : yah, i am a very good student in studies. above 90% தான் எப்பவுமே என்னோட மார்க்.(எல்லா நடிகைகளுமே அப்டித்தான்)


நி.தொ. : உங்க முதல் நடிப்பு அனுபவத்த பத்தி சொல்லுங்க


நடிகை : first day shooting, first time camera முன்னால நிக்கிரேன், கொஞ்சம் பயம் இருந்தது, but director, hero, co-artists எல்லாரும் ரொம்ப help பான்னாங்க,friendly ஆ பழகினாங்க.


நி.தொ. : நீங்க தற்செயலாதான் நடிக்க வந்ததா சொன்னீங்க. ஒருவேள நடிக்க வரலேன்ன என்ன ஆகிருப்பீங்க?
நடிகை : my ambition is to become a business woman, so U.S.ல M.B.A.
படிச்சிட்டு இருந்துருப்பேன் .

நி.தொ. : கவர்ச்சியா நடிக்கிரத பத்தி என்ன நினைகிறீங்க?
நடிகை : அதுல என்ன தப்பு இருக்கு. எனக்கு glamour dress suit ஆகும். என்னோட ரசிகர்களும் அதான் எதிர்பாக்குறாங்க(அப்டின்னு அவுங்களாவே முடிவு பண்ணிகிறது)

நி.தொ. : அப்போ நீச்சல் உடையில நடிக்க தயாரா?
நடிகை : கதைக்கு தேவைபட்டா கண்டிப்பா நடிப்பேன். swimming pool ல swim dress la போட முடியும், புடவைய எப்டி கட்டிக்க முடியும்? (எப்டி வேணா நடிக்க தயார் னு சொல்லாம சொல்றது)

நி.தொ. : உங்களுக்கு புடிச்ச நடிகர், நடிகை யாரு?
நடிகை : எல்லாரையும் புடிக்கும்.

நி.தொ. : யாராவது ஒருத்தர மட்டும் சொல்லுங்க.
நடிகை : (யோசிக்கிறார்) மனோரமா .

நி.தொ. : உங்களுக்கு புடிச்ச படம்

நடிகை : பாச மலர் ,வீரபாண்டிய கட்டபொம்மன்

( ஆனா அவிங்க இந்த பழைய தமிழ் படத்தையெல்லாம் பாத்துருக்க் மாட்டாங்க )


.தொ. : இப்ப நாம் நிறைவு பகுதிக்கு வந்துடோம், உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
நடிகை : எல்லாரும் என்னோட படத்த பாருங்க, தொடர்ந்து உங்க ஆதரவ எனக்கு தாங்க...வணக்கம்.

சுதந்திர தினத்துக்கு அவங்க படத்த பாத்து சுதந்திரத்த கொண்டாட சொல்றாங்க, நாமளும் அப்டிதானே இருக்கோம். எப்பவாவது யோசிச்சிருக்கோமா
..

உங்களுக்கு பிடித்ருந்தால் உங்கள் ஓட்டுகளை தமிலிஷ், தமிழ் ம
த்தில் பதிவு செய்யவும்ஓட்டுப்போட