Friday, October 23, 2009

எனது முதல் பதிவு ---ஆணாதிக்கம் -சிறுகதை

சீதாவிற்கு அன்று நடந்த சம்பவத்தை நினைத்து பதற்றம், சோகம் எதுவுமே இல்லை. ஏதோ ஒன்றை சாதித்த மகிழ்ச்சி , கர்வம்தான் இருந்தது. அப்படி என்ன நடந்தது தெரியுமா?
அவள் அப்பாவுடன் சண்டை, தன்னை இருபத்தி இரண்டு வருடங்களாக வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்த அப்பாவை எதிர்த்து பேசிவிட்டாள். பதிலுக்கு பதில் கோபம், கொப்பளித்தது அவளிடம். நீங்கள் நினைக்கலாம் இது சாதரண நிகழ்வுதானே என்று, ஆனால் அப்படியல்ல. அன்று என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு சீதாவின் தந்தையை பற்றி தெரிந்து கொள்வோம்....
அவர் ஒரு குடிகாரரோ அல்ல ,புகை பிடிப்பவரும் அல்ல ,வெற்றிலைபாக்கு கூட போடாத சொக்க தங்கம்.ஒரு ஆணிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்குமோ , அவற்றின் காற்று கூட படாமல் இருப்பவர். ஆனால் மனதில் "ஆணாதிக்கம்" என்னும் கொடிய எண்ணமுடையவர். "தான்" என்ற அகந்தை அவருக்கு மிக அதிகமாவே உண்டு.

சீதாவின் அம்மாவை திருமணம் செய்த பின்னர், எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவர், அதற்கு முன்பும்தான்.... ஆனால் தன் மனைவி தன் பேச்சை கேட்க வேண்டும், அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் எண்ணினார். அது இயல்புதான், ஆனால், தான் மட்டும், அவள் பேச்சை காது கொடுத்தும் கேட்க கூடாது என்று கொள்கை வைத்திருந்தார். ஏனென்றால் அவள் பெண். மனைவி என்பவள் கணவனிடம் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்பது அவரின் வரையறை.
இவ்வாறே அவர் போட்ட கட்டைளைகளுக்கு கீழ் படிந்தே நடந்தார் நளாயினி (சீதாவின் அம்மா). கடந்த இருபத்தைந்து வருடங்களகாவே நளாயினி ஒரு சிறை கைதிதான். தனக்கு விருப்பமான புடவையை வாங்க கூட கடைக்கு அனுப்ப மாட்டார். அவரே இரண்டு, மூன்று புடவைகளை எடுத்து வந்து, அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாலை ஆறு மணிக்குள் எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும், குங்குமம்தான் வைத்து கொள்ள வேண்டும், கழுத்து, கை முழுவதுமாக மூடுமாறு ரவிக்கை போட வேண்டும், கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏற கூடாது(காரணம் ஆண்கள் இடிப்பார்களாம்) இப்படி ஏகப்பட்ட கட்டுபாடுகள். இவை அனைத்தையும் பொறுத்து கொண்டுதான் வாழ்ந்தார் நளாயினி.
ஆனால் சீதாவால் முடியவில்லை, அவள் இந்த கால பெண் அல்லவா. அவளுக்கு விவரம் தெரிந்து அவள் அப்பா, சிறிது பேசியதே இல்லை. கோவில், திருவிழா, சினிமா என்று எங்கும் கூட்டி சென்றது இல்லை. அவள் என்ன விரும்புகிறாளோ அதை உடனே வாங்கி தந்துவிடுவார். அவள் விரும்பியதை வாங்கி தந்து அவளை மகிழ்ச்சி படுத்த தவறியதே இல்லை. ஆனால் சீதா எதிர்பார்த்தது அது மட்டுமல்ல......எல்லோரையும் போல குடும்பத்தோடு எங்கும் செல்ல வேண்டும், தந்தையுடன் அமர்ந்து நிறைய பேச வேண்டும், அவள் அம்மாவும், அப்பாவும் ஒன்றாக சேர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும், சிரித்து பேசி மகிழ வேண்டும். இப்படி பல....`ஆனால் இன்று வரை எதுவுமே நிறைவேற வில்லை, இனி நிறைவேற போவதும் இல்லை...
சீதாவும் வளர்ந்து பெரியவளாகிவிட்டாள், அவளுக்கான கட்டளைகளும் தயாராகிவிட்டன, இருபாலர் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்க மாட்டேன் .சினிமா பார்க்க கூடாது ,தோழிகளோடு எங்கும் போக கூடாது .அவர் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் செய்திகள் மட்டுமே பார்க்க வேண்டும்.காரணம் இந்த சினிமா கெடுத்து விடுமாம் .

இப்படியாக சீதாவும் வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்தாள்,திருமணமும் நடந்து முடிந்தது.ஆனால் சீதாவிற்கு அவள் அப்பா மீது இருந்த கோபம் மனதில் எங்கோ புதைந்து இருந்தது , அவளை மிகவும் கோப படுத்தியது ,அவள் அம்மாவை அவர் நடத்திய விதம்,ஒரு அடிமையை போலத்தான் நடத்தினார்.மனைவி என்பவள் சமைப்பது,துணி துவைப்பது,கணவனின் உடைகளுக்கு இஸ்த்ரி போடுவது,கணவருக்கு பணிவிடை செய்வது இதுதான் அவள் வேலை,அவளுக்கென்று உணர்ச்சியே கிடையாதா? பெண் என்பதால் இருக்க கூடாதா? இந்த கேள்வியை தான் சீதா அன்று நடந்த பேச்சு வார்த்தையில் ,அவள் அப்பாவை பார்த்து கேட்டாள் .அது தப்பாம் அந்த மனிதருக்கு ,"இன்றில் இருந்து நீ எனக்கு மகளே இல்லை 'என்று ஒரே வரியில் முடித்து கொண்டார் ,அன்று வீட்டை விடு போனவர் தான் ,ஆனால் சீதாவிற்கு தன்னால் தான் தன் அப்பாவிற்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்வு இல்லை ,தன் அம்மாவை சிறையில் இருந்து மீட்ட நிம்மதியே ஓங்கியிருந்தது .கடைசி காலத்தில் கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து தங்கள் பழைய நினைவுகளை அசை போட்டு ,பேரன் பேத்திகளை கொஞ்சி சந்தோசமாய் வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் ,ஆனால் இன்றும் அவள் அப்பாவிற்கு தன் மேல் தவறு இல்லை என்றுதான் சொல்லி திரிகிறார் ,"நான் இப்படித்தான் ,தன்மானக்காரன் பொம்பளைங்களுக்கு என்ன அவ்ளோ திமிரு ,என் கால் ல விழுந்து மனிப்பு கேட்டா கூட நான் வீட்டுக்கு வர மாட்டேன் ",இது தான் அவர் முடிவு.உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும் ....

உங்கள் ஓட்டுக்களை tamilish இல் போடவும் ..

ஓட்டுப்போட