Wednesday, December 23, 2009

போதும்பொண்ணு, பக்கடா & மீனாட்சி அண்ணன்

நம் அனைவரையும் கவர்ந்த நடிகர், நடிகைகள் என்று  அனைவர்க்கும் ஒரு பட்டியல் இருக்கும். அந்த பட்டியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், அஜித்,சிம்ரன், அசின்...இப்படி நீளும். ஆனால் தமிழ் சினிமாவில் இவர்களை தவிர எத்தனையோ மிகவும் திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அந்த வகையில் சமீபத்தில் என்னை கவர்ந்த ஒரு சில நடிகர், நடிகைகளை பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....

முதலில் "பசங்க" படத்தில் மீனாட்சி(அவருதான் கதாநாயகன்) யின் அண்ணனாக வருவாரே, அவருடைய நடிப்பு உண்மையாகவே என்னை மிகவும் கவர்ந்தது. படு யதார்த்தமான நடிப்பு, லேங்குவே ஜ் டெலிவரி இப்டி எல்லாமே நம்ம வீட்ல நடக்குற மாதிரி இருந்துச்சி. அவர் மனைவிகிட்ட கோபபட்டு சண்டை போடும்போதும், அத தப்புன்னு புரிஞ்சிக்கிட்டு வருத்தப்பட்டு பேசும்போதும் ரொம்ப இயல்பா நடிச்சிருபாரு. அவருக்கு சரியான வாய்ப்புகள் இனியாவது கிடைக்க வேண்டும்.

Pasanga Gallery
அடுத்து அவர் மனைவியாக வருவாரே "போதும்பொண்ணு" அவருடைய நடிப்பும் அப்படித்தான். கீச்சு கீச்சி குரல்ல ஒரு நடுத்தர குடும்ப தலைவிக்கு உண்டான ஏக்கத்தை ரொம்ப எதார்த்தமாக வெளிபடுதிருப்பார். எந்த வித மேக் அப்பும் இல்லாமல் இயல்பான முக பாவத்தோடு நல்லாதானே நடிக்கிறார், இவருக்கும் சரியான வாய்புகள் கிடைக்க வேண்டும்.

கண்ணாடி போட்டு இருக்கே அந்த பொண்ணு நடிப்பும் நிஜமாவே அருமையா இருக்கும். அண்ணனுக்காக குட்டு வாங்கிட்டு வரும்போதும் சரி, அம்மா, அப்பா சண்டை போடும்போதும் சரி உண்மையாவே சின்ன வயசுல என்ன பாக்குற மாதிரி இருந்தது. 

"பக்கடா", இந்த பேரு கேட்டவுடனே அந்த வால் பய்யன் நியாபகம் வரும் எல்லாருக்கும். அவன் அந்த படத்துல காலேண்டர்ல ஒவ்வொரு மாதமும் விடுமுறை எத்தனை நாள் வருதுனு எண்ணி பாப்பானே அது, நாம எல்லாருமே பண்ணினதுதான். ஒரு காட்சியில ரொம்ப லீவ் இல்லன்னு "இன்னும் கொஞ்சம் விட்ருக்கலாம்" அப்டின்னு சொல்வானே, சூப்பர்.....


Pasanga Gallery

இந்த படத்தோட இயக்குனர் பாண்டிராஜ் மிக கச்சிதமாக கதாபாத்திரங்களை தேர்வு செஞ்சிருக்கார். திறமையான இந்த மாதிரி நடிகர்கள மத்த இயக்குனர்களும் பயன்படுத்திக்கணும்.


                                                        எப்புடி......

 Pasanga Gallery


தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....

உங்கள் கருத்துகளையும் தான்.........

ஓட்டுப்போட

12 comments:

சென்ஷி said...

நல்ல நடிகர்கள் பற்றிய பகிர்வு..

ரேவதி சீனிவாசன் said...

நன்றி சென்ஷி... வருகைக்கும், கருத்துக்கும்

அண்ணாமலையான் said...

வித்தியாசமான கோனத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்..பாரட்டுக்கள்...

சந்தனமுல்லை said...

நானும் ரசித்தேன் பசங்க படத்தையும் இந்த இடுகையையும்! அவர்களின் இயல்பான தன்மைதான் மிகவும் கவர்கிறது! :-)

ரேவதி சீனிவாசன் said...

நன்றி அண்ணாமலையான், சந்தனமுல்லை....

Jawahar said...

நான் ரொம்ப ரசித்துப் பார்த்த படம். அந்த ஞாபகங்களை இனிமையாக தூண்டி விட்டிருக்கிறீர்கள். நல்லா எழுதறீங்க! நீங்க ப்ளாக்கர்ன்னே இன்னிவரைக்கும் தெரியாது! நோட் பண்ணிக்கறேன்...

http://kgjawarlal.wordpress.com

ரேவதி சீனிவாசன் said...

ரொம்ப நன்றி சார். நீங்க என்னோட பதிவுக்கு கருத்து சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதுக்கு முன்னாடி "ஏக்கம்" னு என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்களே...நியாபகம் இருக்கா?

வினோத்கெளதம் said...

மேலே குறிப்பிட்டு உள்ள அனைவரும் எதார்த்தமாக நடித்து இருந்தனர். நல்ல பகிர்வு..

ரேவதி சீனிவாசன் said...

நன்றி வினோத்கெளதம்.......

goma said...

படம் எடுப்பவர்களில் பெரும்பாலோர்,துட்டுக்காகவும் ஹிட்டுக்காகவும் எடுக்கும் பொழுது ,யாருங்க நடிப்பைப் பார்க்கப் போறாங்க.இருந்தாலும் நம்ம ஆத்தாமையை நம்ம பிளாகிலே கூடப் போடக் கூடாதுன்ன எப்படி?

goma said...

ரேவதி சீனிவாசன்
புதிதாய் என்ன பதிவிட்டிருக்கிறீர்கள் என்று வந்தால் டிசம்பர் 23 பதிவோடு நிற்கிறதே...
வேலை பளுவா?

ரேவதி சீனிவாசன் said...

வேலை பளு இல்லை, என் பைய்யன் குரும்பு பளுதான். நடக்க ஆரம்பிச்சிட்டான், அதான் உடனே உங்களுக்கு நன்றி சொல்ல முடியல.இப்ப உங்களுக்கு பதில் டைப் பன்னும்போது கூட என் பைய்யன் கீழ விழுந்துட்டான். சீக்கிரமே ஒரு பதிவோடு சந்த்திக்கிரேன்......